செய்திகள்
மாஸ்க் அணிந்து செல்லும் மக்கள்

சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-05-04 07:33 GMT   |   Update On 2020-05-04 07:33 GMT
சிங்கப்பூரில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்:

உலகம் முழுவதும் 212 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸ், 2.28 லட்சம் மக்களை பலி வாங்கி உள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். சிங்கப்பூரில் 18,205 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் ஏப்ரல் இறுதி வரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 4800 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை சிங்கப்பூருக்கான இந்திய தூதர் ஜாவேத் அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களில் 90 சதவீதம் பேர், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள். இவர்களில் பெரும்பாலும் நெரிசல் மிகுந்த தங்குமிடங்களில் தங்கியிருந்தவர்கள். நோய்த்தோற்று கண்டறியப்பட்டுள்ள இந்தியர்களுக்கு பாதிப்பு தீவிரம் இல்லை என்றும், உடல்நிலை தேறி வருவதாகவும் இந்திய தூதர் கூறி உள்ளார். 
Tags:    

Similar News