செய்திகள்
அமெரிக்க விண்வெளி படையின் தலைவர் ஜான் ரேமண்ட்

ஈரான் செயற்கைகோளுக்கு உளவு தகவல்களை வழங்கும் திறன் கிடையாது - அமெரிக்க விண்வெளி படை

Published On 2020-04-27 08:57 GMT   |   Update On 2020-04-27 08:57 GMT
ஈரான் விண்ணில் செலுத்தியுள்ள ‘நூர்’ செயற்கைகோளுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கும் திறன் கிடையாது என அமெரிக்க விண்வெளி படையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனிடையே கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதால் இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் உருவானது.

எனினும் சில வாரங்களுக்கு பின்னர் இந்த பதற்றம் சற்று தணிந்தது. ஆனால் சமீப நாட்களாக இருநாடுகளும் தொடர்ந்து வார்த்தை மோதல்களில் ஈடுபட்டு வருவதால் மீண்டும் மோதல் வலுத்து வருகிறது.இதற்கிடையில், அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் தனது முதல் ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பல தோல்விகளுக்கு பிறகு ‘நூர்’ என்ற இந்த செயற்கைகோளை விண்ணில் செலுத்தியதால் ஈரான் இதனை சாதனையாக கருதியது.



இந்த நிலையில் ஈரான் விண்ணில் செலுத்தியுள்ள ‘நூர்’ செயற்கைகோளுக்கு உளவுத்துறை தகவல்களை வழங்கும் திறன் கிடையாது என அமெரிக்க விண்வெளி படையின் தலைவர் ஜான் ரேமண்ட் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஈரானின் ‘நூர்’ செயற்கைகோளை அமெரிக்கா விண்வெளி படை கண்காணித்து வருகிறது. அந்த செயற்கைகோளுக்கு உளவு தகவல்களை வழங்கும் திறன் இல்லை என்பதே உண்மை” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News