செய்திகள்
ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே

‘ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடக்கும்’ - ஜப்பான் பிரதமர் நம்பிக்கை

Published On 2020-03-14 21:17 GMT   |   Update On 2020-03-14 21:17 GMT
கொரோனா பாதிப்பின்றி ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடக்கும் என ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தெரிவித்துள்ளார்.
டோக்கியோ:

ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் ருத்ரதாண்டவத்தால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜப்பானிலும் 700-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.



இந்த நிலையில் ஒலிம்பிக் ஏற்பாடு குறித்து ஜப்பான் பிரதமர் ‌ஷின்ஜோ அபே நேற்று அளித்த பேட்டியில், ‘கொரோனா பாதிப்பின்றி ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று விரும்புகிறோம். சில தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பிடம் பேசினேன். அப்போது ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்த ஜப்பானும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவது என்று ஒப்புக் கொண்டோம். போட்டியை தள்ளிவைப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. நாட்டில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை’ என்றார்.
Tags:    

Similar News