செய்திகள்
பாகிஸ்தானில் வெட்டுக்கிளி தாக்குதல்

வெட்டுக்கிளி தாக்குதல் - பாகிஸ்தானில் அவசரநிலை பிரகடனம்

Published On 2020-02-01 16:46 GMT   |   Update On 2020-02-01 16:46 GMT
பாகிஸ்தானில் கோதுமை பயிரிகளை அழிக்கும் வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க முடியாமல் அந்நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் தெற்கு மாகாணமாக சிந்து முதல் வடகிழக்கு மாகாணமாக கைபர் பக்துவா வரையிலான பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள கோதுமை உள்ளிட்ட பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்து வருகிறது. 

20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பயிர்களை வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளதால் லட்சக்கணக்கான ஹெக்டெர் விவசாய நிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளனர். 

இந்த வெட்டுக்கிளி தாக்குதலை சமாளிக்க அந்நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து அந்நாட்டு தகவல் துறை மந்திரி ஃப்ர்டோஸ் அஸ்க்யூ அவான் கூறுகையில், '20 ஆண்டுகளில் இல்லாத வெட்டுக்கிளி தாக்குதலை நாம் தற்போது எதிர்கொண்டுள்ளோம். இந்த அச்சுறுத்தலை சமாளிக்க தேசிய அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்நாட்டு உணவு பாதுகாப்புத்துறை மந்திரி மஹ்டும் குஷ்ரோ பஹ்டிர் கூறுகையில், 'வெட்டுக்கிளி தாக்குதல் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு உள்ளது. இது மிகவும் ஆபத்தான சூழல்நிலை’ இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News