செய்திகள்
ஜெர்மனி அருங்காட்சியக பழங்கால நகைகள்

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகள் கொள்ளை

Published On 2019-11-27 05:08 GMT   |   Update On 2019-11-27 05:08 GMT
ஜெர்மனி அருங்காட்சியகத்தில் விலைமதிக்க முடியாத பழங்கால நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெர்லின்:

ஜெர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள சாக்சனி மாகாணத்தின் தலைநகர் டிரஸ்டனில் ‘கிரீன் வாலட்’ என்ற அருங்காட்சியகம் உள்ளது. இங்கு ஐரோப்பிய நாடுகளின் பழங்கால பொக்கிஷங்கள், அரிய கலை பொருட்கள் உள்ளிட்டவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை முகமூடி கொள்ளையர்கள் 2 பேர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள் பழங்கால நகைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் இருந்த நகை பெட்டி ஒன்றை கொள்ளையடித்து சென்றனர்.

அந்த நகை பெட்டியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த வைரங்கள், மாணிக்கங்கள் உள்பட விலைமதிக்க முடியாத நகைகள் ஏராளமாக இருந்ததாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்தனர். அருங்காட்சியகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருப்பதாகவும், அதை அடிப்படையாக கொண்டு அவர்களை வலைவீசி தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News