செய்திகள்
கைது செய்யப்பட்ட இரண்டு பேராசிரியர்கள்

அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள்

Published On 2019-11-19 00:32 GMT   |   Update On 2019-11-19 00:32 GMT
அமெரிக்காவில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்த பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இரண்டு பேராசிரியர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள அர்காடெல்பியா ஹெண்டர்சன் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியர்களாக பணியாற்றி வந்தவர்கள் டெர்ரி டேவிட் பேட்மேன் (வயது 45) மற்றும் பிராட்லி ஆலன் ரோலண்ட் (40).

இவர்கள் இருவரும் இணைந்து, பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதைப்பொருளை தயாரித்தனர். பல்கலைக்கழகத்தின் அறிவியல் மையத்தில் ரசாயன நெடி ஏற்பட்டதை தொடர்ந்து, நடத்திய விசாரணையில் பேராசிரியர்கள் இருவரும் போதைப்பொருள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பேராசிரியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பேட்மேன் மற்றும் ரோலண்ட் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அவர்கள் இருவரும் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் தயாரித்தது சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் தலா 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அமெரிக்க சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News