செய்திகள்
அமெரிக்க கடற்படை படகுகள்

மனைவியுடன் சேர்ந்து ராணுவ படகு கடத்தல்- அமெரிக்க கடற்படை அதிகாரி மீது வழக்கு பதிவு

Published On 2019-11-02 07:43 GMT   |   Update On 2019-11-02 07:43 GMT
அமெரிக்காவில் ராணுவ படகுகளை சீனாவிற்கு கடத்த முயன்ற கடற்படை அதிகாரி, அவரது மனைவி உள்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவை சேர்ந்தவர் பான் யாங் (வயது 34). இவர் புளோரிடா மாநிலத்தில் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யாங் யாங் (வயது 33). பான் யாங் தனது மனைவி மற்றும் இரண்டு சீனர்களுடன் சேர்ந்து கடற்படைக்கு சொந்தமான  படகுகளை கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அவர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அரசுதரப்பு வழக்கறிஞர்கள் கூறுகையில், “பான் யாங் கடற்படைக்கு சொந்தமான சிறிய ரக ராணுவ படகுகளையும் அவற்றின் எஞ்சின்களையும் சீனா நாட்டிற்கு கடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளார். இதற்கு அவரது மனைவி மற்றும் இரண்டு சீன நாட்டினரும் உடந்தையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சதித்திட்டம் தீட்டியது, தவறான தகவல்கள் சமர்ப்பித்தது மற்றும் கடத்தல் முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படுமானால் 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்” என தெரிவித்தனர்.
Tags:    

Similar News