செய்திகள்
500 ஆண்டுகள் பழமையான ஷூரி கோட்டை

500 ஆண்டுகள் பழமையான ஜப்பான் கோட்டை தீயில் உருக்குலைந்தது

Published On 2019-11-01 01:23 GMT   |   Update On 2019-11-01 01:23 GMT
ஜப்பானில், ஒக்கினவா தீவில் 500 ஆண்டுகள் பழமையான ஷூரி என்ற கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகின.
டோக்கியோ:

ஜப்பானில், ஒக்கினவா தீவில் 500 ஆண்டுகள் பழமையான ஷூரி என்ற கோட்டை இருந்தது. இந்த கோட்டை முற்றிலும் மரப்பலகைகளால் கட்டமைக்கப்பட்டது. இந்த கோட்டையானது, இரண்டாவது உலகப்போரின்போது முற்றிலும் அழிக்கப்பட்டது. ஆனால் மறுபடியும் கட்டமைக்கப்பட்டு விட்டது. அதைத்தொடர்ந்து ஷூரி கோட்டை, யுனஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமாக திகழ்ந்து வந்தது. இந்த கோட்டையில் நேற்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.40 மணிக்கு திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மின்னல் வேகத்தில் கோட்டை முழுவதும் பரவ தொடங்கியது. தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து 10 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.இருப்பினும் இந்த கோட்டையின் 7 முக்கிய கட்டிடங்கள் எரிந்து சாம்பலாகி விட்டன. இதனால் அந்தக்கோட்டையே உருக்குலைந்து போனது.

இது ஜப்பான் மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி டோயகோ மியாஜட்டோ என்ற 84 வயது முதியவர் கருத்து தெரிவித்தபோது, “ இந்த கோட்டை எங்களுக்கு கடவுளைப்போல. இப்போது அது தீக்கு இரையாகி விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது” என்று கூறினார்.
Tags:    

Similar News