சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானது.
சிலி நாட்டில் கடும் நிலநடுக்கம்- ரிக்டரில் 6.8 ஆக பதிவு
பதிவு: செப்டம்பர் 30, 2019 11:53
சிலி நாட்டில் நிலநடுக்கம் (மாதிரிப் படம்)
சான்டியாகோ:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றானா சிலி நாட்டில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிலி நாட்டின் தலைநகர் அருகே அமைந்துள்ள டால்கா நகருக்கு மேற்கே 134 கிலோ மீட்டர் தூரத்தில், பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவானதாக முதலில் தகவல்கள் வெளியாகின.பின்பு சிலி தேசிய நில அதிர்வு ஆய்வு மையம், 6.8 ரிக்டர் என தெரிவித்தது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின. சாலைகள்,
கட்டிடங்கள் போன்றவற்றில் சிறு சிறு பிளவுகள் ஏற்பட்டன. உயிர்ச்சேதம் ஏதும் இல்லை. சுனாமி எச்சரிக்கை ஏதும்
விடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.
உலகின் 90 சதவீத நிலநடுக்கங்கள் ஏற்படும் நெருப்பு வளையம் பகுதியில் சிலி நாடு உள்ளது. கடந்த 2010 ம் ஆண்டில் 8.8 ரிக்டர்
அளவிலான நிலநடுக்கமும், 1960-ம் ஆண்டு 9.5 ரிக்டர் அளவிலான மிகப்பெரிய நிலநடுக்கமும் சிலி நாட்டில் ஏற்பட்டுள்ளன என்பது
குறிப்பிடத்தக்கது.
Related Tags :