செய்திகள்
ராபர்ட் சி. ஒ பிரையன்

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம்

Published On 2019-09-18 15:12 GMT   |   Update On 2019-09-18 15:12 GMT
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையனை நியமனம் செய்து அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று அறிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஜான் பால்டன். ஈரான் மற்றும் வடகொரியா போன்ற விவகாரங்களில் சிறப்பாக செயல்படவில்லை எனக்கூறி கடந்த வாரம் அதிபர் டொனால்டு டிரம்ப் அவரை பதவி நீக்கம் செய்தார். அப்போது, புதிய பாதுகாப்பு ஆலோசகர் கூடிய விரைவில் நியமிக்கப்படுவார் என அதிபர் தெரிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் சி. ஒ பிரையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், ஒ பிரையனுடன் அதிக காலம் பணியாற்றியுள்ளேன், அவர் நாட்டுக்காக சிறப்பாக செயல்படுவார் என அதில் தெரிவித்துள்ளார்.



முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபுள்யூ புஷ் அரசால் 2005-ம் ஆண்டு ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் தூதராக நியமிக்கப்பட்ட ஒ பிரையன், ஒபாமா காலத்திலும் பதவி வகித்தார். ஒ பிரையன் தற்போதுவரை அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் நாட்டின் பிணைக்கைதிகள் விவகாரம் தொடர்பான சிறப்பு தூதரக அதிகாரியாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News