செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட உலக சிந்து அமைப்பினர்

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து காங்கிரஸ் அமைப்பு ஆர்ப்பாட்டம்

Published On 2019-09-10 12:48 GMT   |   Update On 2019-09-10 12:48 GMT
சிந்து மாகாணப் பகுதியில் பாகிஸ்தான் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு உலக சிந்து காங்கிரஸ் அமைப்பினர் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜெனிவா:  

ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு சமீபத்தில் நீக்கியதில் இருந்து இந்தியா-பாகிஸ்தான் இடையில் உச்சக்கட்ட பனிப்போர் தொடங்கியுள்ளது.

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமைகள் மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதற்கிடையில், சுவிட்சர்லாந்து நாட்டின் தலைநகரான ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் 42-வது வருடாந்திர கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தின் 2-வது நாளான இன்று பாகிஸ்தான் சார்பில் காஷ்மீர் குறித்து பிரச்சனை எழுப்ப திட்டமிட்டுள்ளது. 



இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவம் மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டு வருவதாக உலக சிந்து காங்கிரஸ் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிந்து பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தால் அடக்குமுறைகளுக்கு உள்ளான நபர்களின் புகைப்படங்களை ஏந்தி உலக சிந்து அமைப்பினர் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். 
Tags:    

Similar News