செய்திகள்
பிரதமர் மோடி மற்றும் புதின்

இந்தியாவில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய ரஷியாவுடன் ஒப்பந்தம்

Published On 2019-09-04 11:22 GMT   |   Update On 2019-09-04 12:18 GMT
இந்தியாவில் ரஷியா நிறுவனம் இயற்கை எரிவாயு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் பிரதமர் மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
மாஸ்கோ:

கிழக்கு பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று ரஷியா சென்றுள்ளார். அந்நாட்டின் விளாடிவோஸ்டோக் நகரில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்த மோடி இரு நாட்டு உறவு குறித்து விவாதித்தனர்.

பின்னர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் புதின் முன்னிலையில் இந்தியா-ரஷியா இடையில் பல்வேறு புதிய ஒப்பந்தங்களும் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. 

மேலும், இந்தியாவுக்கு நீண்டகால அடிப்படையில் இயற்கை எரிவாயு விற்பனை செய்ய ரஷியா ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் இந்தியாவின் ஹெச்.எனர்ஜி நிறுவனம் மற்றும் ரஷியாவின் நோவாடெக் நிறுவனத்துக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Tags:    

Similar News