செய்திகள்
டிரம்ப் மற்றும் மேடலின் வெஸ்டர்ஹவுட்

டிரம்பின் நிர்வாக உதவியாளர் ராஜினாமா

Published On 2019-08-30 06:07 GMT   |   Update On 2019-08-30 06:07 GMT
அமெரிக்க அதிபரின் நிர்வாக உதவியாளர் மேடலின் வெஸ்டர்ஹவுட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ்கோ:

அமெரிக்க அதிபரின் நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தவர் மேடலின் வெஸ்டர்ஹவுட். இவர் டிரம்ப் ஆட்சி தொடங்கியதிலிருந்தே வெள்ளை மாளிகையில் நிர்வாக பணியில் இருந்து வந்தவர். இந்நிலையில், அதிபரின் குடும்பத்தினர் மற்றும் வெள்ளை மாளிகை விவகாரம் தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடிய மேடலின், பிறகு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேடலின் வெஸ்டர்ஹவுட் அலுவல் ரீதியாக இல்லாமல் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சில தகவல்களை கூறியது, அதிபர் டிரம்புக்கு தெரியவந்ததை அடுத்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

டிரம்பின் ஆட்சிக்காலத்தில் இதற்கு முன்பும் முக்கிய அரசு அதிகாரிகள் ராஜினாமா செய்து செய்துள்ளனர். அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ், அமெரிக்காவின் ஐ.நா தூதுவர் நிக்கி ஹாலே ஆகியோர் கடந்த ஆண்டு பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

Similar News