செய்திகள்
நள்ளிரவில் ஏவப்பட்ட கஸ்னவி ஏவுகணை

நள்ளிரவில் ஏவுகணை சோதனை செய்தது பாகிஸ்தான் ராணுவம்

Published On 2019-08-29 07:22 GMT   |   Update On 2019-08-29 07:22 GMT
பாகிஸ்தான் ராணுவம் நள்ளிரவில் வெற்றிகரமாக ஏவுகணை சோதனை செய்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்:

'கஸ்னவி' ஏனும் கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணை நள்ளிரவில்  வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை 290 கி.மீ வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் சக்தி வாய்ந்தது. இது குறித்து பாகிஸ்தான் ஐ.எஸ்.பி.ஆர் இயக்குனர் ஆசிப் காபூர் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘290 கி.மீ. வரை பல வகையான ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் திறன் கொண்ட கஸ்னவி எனும் பாலிஸ்டிக் ஏவுகணையை நேற்றிரவு சோதனை செய்தது பாகிஸ்தான்.



இந்த சோதனையில் வெற்றிப் பெற்றது. சி.ஜே.சி.எஸ்.சி & சர்வீசஸ் தலைவர்கள் இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய குழுவினருக்கு வாழ்த்தினர். இதையடுத்து பாகிஸ்தானின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் சோதனை குழுவிற்கும் தேசத்திற்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்’ என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News