search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் அரசு"

    • பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    மின்சார கட்டணம், எரிபொருள், உணவு பொருள் விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, தீவிரவாத குழுக்கள் சுதந்திரமாக சுற்றி திரிவது ஆகியவற்றால் போராட்டங்கள் நடக்கிறது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு ராணுவத்துக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்து பாகிஸ்தான் அரசாங்கம், ராணுவ அதிகாரிகள் வெளியேற வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பலர் அப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
    • முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. அங்கிருந்து ஏராளமானோர் அகதிகளாக அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள்.

    இந்நிலையில் பாகிஸ்தானில் அனுமதியில்லாமல் தங்கியுள்ள 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு அந்த நாட்டிலிருந்து வந்தவர்கள் தான் காரணம் என்று பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதற்கிடையே தான் ஆப்கானிஸ்தான் அகதிகள், பாகிஸ்தானில் இருந்து வெளியேற உத்தரவிட்டு உள்ளது.

    தற்போது உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் 17 லட்சம் ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கை மேற் கொள்ளப்படுகிறது. பாகிஸ்தானின் இந்த அறிவிப்புக்கு தலிபான்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை பாகிஸ்தான் அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடந்த வாரம் மஸ்தூங் நகரில் நடந்த மத நிகழ்ச்சியில் தற்கொலைப்படை தாக்குதல் நடந்தது. இதில் 52 பேர் பலியானார்கள். இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தும் தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் அரசு குற்றம் சாட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் நமக்கு தேவை.

    பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 350 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட உலகின் ஐந்தாவது அதிக மக்கள்தொகை கொண்ட பாகிஸ்தான் அதன் மதிப்பீட்டின்படி வெறும் 3 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்புடன், ஆபத்தான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மேலும், டாலர் அழுத்தத்தையும் எதிர்கொள்கிறது.

    இதனால் நாட்டில் முடிந்த வரையில் செலவினங்களை குறைக்க பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு நடவடிக்கையாக, பாகிஸ்தானில் அமைச்சர்கள் இனி பிசினஸ் கிளாஸில் பயணிக்கக்கூடாது என்றும் வெளிநாடுகளுக்கு செல்லும்போது நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாது எனவும் அந்நாட்டு அரசு அறிவித்து தடை விதித்துள்ளது.

    நாடே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் சிக்கனமும், தியாகமும், எளிமையும் தங்களுக்கு தேவை என அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது.

    இதுதொடர்பாக பேசிய அந்நாட்டு பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறியதாவது:-

    இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அடுத்த பட்ஜெட்டில் அரசாங்கம் மேலும் சிக்கன நடவடிக்கைகளைப் பின்பற்றும். இது காலத்தின் தேவை. காலம் நம்மிடம் இருந்து என்ன கோருகிறது என்பதை நாம் செயலில் காட்ட வேண்டும். அதுதான் சிக்கனம், எளிமை மற்றும் தியாகம்

    நாட்டில் 764 மில்லியன் டாலர் செலவைக் குறைக்கும் நடவடிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சர்களும் தானாக முன்வந்து பங்களிக்கின்றனர். உயர் அதிகாரிகள் தவிர பல மத்திய மற்றும் மாநில அதிகாரிகள் தங்கள் சம்பளம் மற்றும் சலுகைகளை கைவிட முன்வந்துள்ளனர்.

    செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு வரை ஆடம்பர பொருட்கள் மற்றும் கார்களை வாங்குவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது.
    • குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம் ஒரு மசோதாவை பரிந்துரை செய்துள்ளது. அதன்படி நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறையை அவதூறு செய்பவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும்.

    சில வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வரைவு மசோதா சட்டம் நீதி அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு, பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவைக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ளது. நீதித்துறை, ஆயுதப்படைகளை கேலி செய்யும் நோக்கத்துடன் எந்த ஊடகத்தின் மூலமாகவும் அறிக்கை வெளியிடுவது, தகவல்களை பரப்புவது ஆகியற்றுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். குற்றவாளி வாரண்ட் இன்றி கைது செய்யப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக அமைச்சரவை வெளியிட்ட அறிக்கையில், சமீப காலமாக நீதித்துறை மற்றும் ராணுவம் உள்பட அரசின் சில நிறுவனங்கள் மீது அவதூறான, இழிவான, கொடூரமான தாக்குதல்களை நாடு கண்டுள்ளது. சுயநல நோக்கங்களுக்காக சிலர் வேண்டு மென்றே தவறான பிரசாரத்தை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    • நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
    • இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    பாகிஸ்தான் நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்திடம் பாகிஸ்தான் அரசு கடன் கேட்டுள்ளது. பாகிஸ்தானிடம் அந்நிய செலாவணி கையிருப்பு குறைவாக உள்ளதால் வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்கும் நிலை உள்ளது.

    கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில் நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்பு பணத்தை பாதுகாக்கவும் பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதையடுத்து பணக்காரர்கள் மீதான வரியை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.

    மேலும் அரசு அதிகாரிகள் புதிய கார் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் அமைச்சர் இஸ்மாயில் கூறும்போது, பணக்காரர்கள் மீதான வரி உயத்தப்படுகிறது. கார்கள் இறக்குமதி, அரசு அதிகாரிகள் புதிய வாகனங்கள் வாங்குவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது என்றார்.

    இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் நேற்று இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட 24 நாடுகளின் புதிய தூதர்களுக்கான நியமன ஆணைக்கு ஒப்புதல் வழங்கினார்.  இந்தியாவுக்கான புதிய பாகிஸ்தான் தூதராக மொயின் உல் ஹக் என்பவரை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை நியமித்துள்ளது.

    மொயின், பிரான்ஸ் நாட்டிற்கான தூதராக பணியாற்றி வந்தார். முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் நெறிமுறைகளின் தலைவராகவும் பணியாற்றினார்.

    இந்தியாவுக்கான தூதராக ஏற்கனவே பதவி வகித்த சோகைல் முகமது, பாகிஸ்தானின் புதிய வெளியுறவு செயலாளராக பொறுப்பேற்றார். அந்த பதவி காலியாக இருந்ததையடுத்து, மொயின் இந்திய தூதராக பொறுப்பேற்றுள்ளார்.  

    இது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி கூறுகையில், ‘இந்தியா மிக முக்கியமான நாடாகும். அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை செய்த பின்னரே மொயின் உல் ஹக்கிற்கு பொறுப்பு வழங்கியுள்ளோம். டெல்லிக்கு மொயினை அனுப்பி வைக்க உள்ளோம். அவர் சிறந்த முறையில் பாகிஸ்தானின் கருத்துகளை வெளிப்படுத்துவார் என நம்புகிறோம்’ என்று கூறினார். 
    ×