என் மலர்
நீங்கள் தேடியது "Pakistan army"
- பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார்.
- ஜம்மு காஷ்மீர் குறித்து இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துக்கள் வருகின்றன என கூறினார்.
லாகூர்:
பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதியாக ஆசிம் முனீர் கடந்த 24-ம் தேதி பொறுப்பேற்றார். ராணுவ தளபதியாக பொறுப்பேற்றதை அடுத்து ஆசிம் முனீர் முதல் முறையாக இந்தியாவுடனான எல்லைப் பகுதியை நேற்று பார்வையிட்டார்.
இந்நிலையில், ரக்ஷிக்ரி பகுதி இந்தியாவுடனான எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் உள்ள வீரர்களுடன் உரையாடினார். அதன் பின் ஆசிம் முனீர் பேசியதாவது:
கில்கித் பல்கிஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து சமீபத்தில் இந்திய தலைமையிடமிருந்து பொறுப்பற்ற கருத்துகள் வருவதை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
எங்கள்மீது போர் திணிக்கப்பட்டால் தாய்நாட்டின் ஒவ்வொரு இன்ச் பகுதியையும் பாதுகாக்க மட்டுமின்றி எதிரிகளை எதிர்த்துப் போரிடவும் பாகிஸ்தான் ராணுவம் தயாராக உள்ளது என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம் என தெரிவித்தார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.
இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire



இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள பிரச்சனைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து, அமெரிக்காவில் இரு நாட்டு வெளியுறவு மந்திரிகள் சந்தித்து பேச இந்தியா சம்மதித்தது.
இதற்கிடையே, காஷ்மீரில் மூன்று போலீசார் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்டனர். மேலும், சர்வதேச எல்லையில் பாதுகாப்பு படை வீரர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலை பாகிஸ்தான் ராணுவத்தால் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டிய இந்தியா பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதற்கிடையே, இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் மீதான பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனமான செயலுக்கு பதிலடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்தார். மேலும், நமது ராணுவ வீரர்கள் உணர்ந்த அதே வேதனையை அவர்களும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கு எதிர்வினையாக பாகிஸ்தான் ராணுவம் போருக்கு தயாராக உள்ளது என அந்நாட்டு ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், உயிரிழந்த வீரரின் உடலை சிதைத்த இந்திய ராணுவம் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறது. அவர்கள், கடந்த காலங்களில் இதை போன்று பலமுறை செய்துள்ளனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் கட்டுக்கோப்பானது, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் எவ்விதத்திலும் எங்கள் ராணுவம் ஈடுபடாது.
போருக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். எனினும், பாகிஸ்தான் மக்களின் நலன், அண்டை நாடுகள் மற்றும் பிராந்திய நலன் கருதி அமைதி வழியில் செல்லவே விரும்புகிறோம்.
எல்லையில் போர்நிறுத்தம் வேண்டும் என்று கடந்த மே மாதம் இந்திய ராணுவம் கோரிக்கை வைத்தது. அதை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம். ஆனால், இவ்வாறான செயல்களில் இந்திய ராணுவம் தொடர்ந்து ஈடுபட்டால் நாங்கள் வேறு விதமான நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழல் வரும் என ஆசிப் கபூர் தெரிவித்தார். #BipinRawat #PakistanArmy
புதுடெல்லி:
இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையே தங்களது புனித கடமையாக கருதி பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
அவர் ஆட்சிக்கு வந்ததால் இந்திய உறவு விவகாரத்தில் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றதுமே இம்ரான்கான் சில கருத்துக்களை வெளியிட்டார்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதை விரும்பவில்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து பிரதமர் மோடி இம்ரான்கானுக்கு அனுப்பிய கடிதத்தில் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வ மான விஷயங்கள் தொடர்பாக ஒத்துழைக்க தயார். இது சம்பந்தமாக பேசுவதற்கும் தயார் என்று கூறி இருந்தார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வந்த பிறகும் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியும், முன்னாள் இந்திய ராணுவ தளபதியுமான வி.கே.சிங். கூறி இருக்கிறார்.

டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வி.கே. சிங் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை வெளியிட்டார்.
இம்ரான்கான் பிரதமராக இருப்பதால் இந்திய விஷயங்கள் தொடர்பாக ஏதேனும் புதிய சூழ்நிலைகளை உருவாக்குவாரா? என்பது எனக்கு தெரியவிலலை.
ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்திய உறவு விஷயத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவர் பாகிஸ்தான் ராணுவம் ஆட்டுவிக்கும் ஒருவராகவே செயல்படுகிறார்.
அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உகந்த சூழ்நிலைகள் வந்தால் மட்டும் தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
பாகிஸ்தானை பொறுத்த வரை இன்னும் ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அதற்கு கட்டுப்படும் நபராக பிரதமர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பெரிய மாற்றங்கள் வந்து விடும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் இருக்கிறாரா? பிரதமரின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்பதை பொறுத்தே மற்ற விஷ யங்கள் அமையும்.
இவ்வாறு வி.கே.சிங். கூறினார்.
மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும் போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் வேறு எந்த மாற்றங்களும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அவர்களுடைய இயற்கை குணம் மாறாது.
அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை நீடிப்பதே அவர்களது குணமாக உள்ளது. அதை மாற்ற முடியாது என்று கூறினார். #Pakistan #ImranKhan