பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக ராணுவ வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவ வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். அதை தொடர்ந்து ராணுவ வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் துப்பாக்கி சண்டையில் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும், 4 பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.

விசாரணையில், துப்பாக்கி சண்டையில் பலியான பயங்கரவாதிகள் தெஹ்ரிக்-தலிபான் பாகிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com