செய்திகள்
வாடகை கார்

அமெரிக்கா பறவைக்கு வாடகை கார் அமர்த்திய இளைஞர்

Published On 2019-08-14 01:04 GMT   |   Update On 2019-08-14 01:04 GMT
மரத்தில் இருந்து விழுந்து அடிப்பட்ட குட்டிப் பறவையை வனவிலங்கு மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு செல்ல வாடகை கார் அமர்த்திய இளைஞரின் செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
நியூயார்க்:

அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தை சேர்ந்த டிம் குரேவ்லே என்ற இளைஞர் அங்குள்ள மதுபான விடுதியில் தனது நண்பர்களுடன் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது, மதுபான விடுதிக்கு வெளியே உள்ள மரத்தில் இருந்து குட்டிப் பறவை ஒன்று தரையில் விழுந்தது. உடனே டிம் குரேவ்லே மற்றும் நண்பர்கள் வெளியே சென்று அந்த பறவையை பார்த்தனர்.

தரையில் விழுந்ததில் அடிப்பட்டு வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த பறவையை வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு கொண்டு செல்ல டிம் குரேவ்லே முடிவு செய்தார். ஆனால் அவரும், அவரது நண்பர்களும் மது போதையில் இருந்ததால் காரை ஓட்ட முடியாமல் போனது.

உடனே டிம் குரேவ்லே செல்போன் செயலி மூலம் பிரபல நிறுவனத்தின் வாடகை காரை அமர்த்தினார். ஆனால் முதலில் வந்த வாடகை கார் டிரைவர் பறவையை காரில் ஏற்ற மறுத்து திரும்பி சென்றார். பின்னர் டிம் குரேவ்லே மீண்டும் ஒரு காரை அமர்த்தினார்.

அந்த கார் டிரைவர் பறவையை ஏற்றி செல்ல சம்மதம் தெரிவித்ததையடுத்து, அந்த பறவை காரில் வனவிலங்கு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Tags:    

Similar News