செய்திகள்
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்வு

Published On 2019-07-26 14:20 GMT   |   Update On 2019-07-26 14:20 GMT
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
பீஜிங்:

சீனாவின் தென்கிழக்கு பகுதியில் குயிஸ்ஹோ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்துக்குட்பட்ட லியு பன்ஷுய் நகரில் உள்ள மலை கிராமம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு 50-க்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர். 

இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 23) நள்ளிரவு இந்த கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 21 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. 

தகவலறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈட்பட்டு, 11 பேரை உயிருடன் மீட்டனர். நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 25-க்கும் மேற்பட்ட நபர்கள் மாயமாகி உள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News