செய்திகள்

அமெரிக்காவில் குடியிருப்பு கட்டிடத்தில் கிரேன் சரிந்து ஒருவர் பலி

Published On 2019-06-10 22:07 GMT   |   Update On 2019-06-10 22:07 GMT
அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் மீது கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் மோசமான வானிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் மாலை அங்கு பலத்த சூறாவளி காற்று வீசியது.

அப்போது அங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கிரேன் ஒன்று சூறாவளி காற்றினால் குடியிருப்பு கட்டிடத்தின் மீது சாய்ந்தது.

இதனால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிர் இழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். கிரேன் விழுந்ததில் குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதம் அடைந்ததோடு, அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் நசுங்கின.
Tags:    

Similar News