செய்திகள்

அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி- போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை

Published On 2019-06-02 00:59 GMT   |   Update On 2019-06-02 00:59 GMT
அமெரிக்காவில் ரூ.56 கோடி மோசடி செய்த போலி சவுதி இளவரசருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் சவுதி இளவரசர் காலித் பில் அல் சவுத் என நடித்து, 30 வருடங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து மோசடிகளை அரங்கேற்றிய நபர் வசமாக சிக்கினார். அவர் ஆண்டனி ஜிக்நாக் (வயது 48).

இவர் அங்குள்ள மியாமி மாகாணம், பிஷர் தீவில் தனக்குத்தானே ஒரு ராஜாங்கம் நடத்தி வந்திருக்கிறார். தன்னைச் சுற்றிலும் மெய்க்காப்பாளர்கள் அணி வகுக்க வலம் வந்துள்ளார்.

பெராரி காரில் போலி தூதரக ரீதியிலான லைசென்ஸ் பிளேட் பொருத்தி, எங்கு சென்றாலும் சவுதி இளவரசர் என்ற தகுதிக்கான உரிமைகளை கேட்டுப்பெற்று வந்துள்ளார். அவரது ஆடம்பர குடியிருப்பில் ‘சுல்தான்’ என்று பெயர் பலகை மாட்டியதை பலரும் நம்பி, அவர் முதலீடுகள் செய்வார் என நம்பி அவரது வங்கிக்கணக்கில் 8 மில்லியன் டாலர் (சுமார் ரூ.56 கோடி) செலுத்தி ஏமாந்துள்ளனர்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதுபோல அவர் அகப்பட்டு, அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் 18 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதி இளவரசர் என்று சொல்லிக்கொண்டு போலியான வாழ்க்கையை சொகுசாக வாழ்ந்தவர், இப்போது சிறைவாசம் அனுபவிக்கிறார். 
Tags:    

Similar News