செய்திகள்

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள வெளிநாட்டு தூதரக வளாகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2019-04-16 11:57 GMT   |   Update On 2019-04-16 11:57 GMT
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள கட்டிட வளாகத்துக்கு இன்று வந்த வெடிகுண்டு மிரட்டலால் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். #Madridskyscraper #Madridembassies
மாட்ரிட்:

ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் நகரில் அமைந்துள்ள வானளாவிய கட்டிட வளாகத்தில் பிரிட்டன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய வெளிநாடுகளின் தலைமை தூதரகங்கள் இயங்கி வருகின்றன.



இந்நிலையில், இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனைத்து தூதரகங்களும் தவிடுப்பொடியாகும் என்றும் இன்று விடுக்கப்பட்ட மிரட்டலால் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.

தூதரகங்களின் பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் அந்த கட்டிடத்தில் உள்ள அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். மிகப்பெரிய பரப்பளவு கொண்ட அந்த கட்டிடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம், அங்குலமாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். #Madridskyscraper #Madridembassies #Madridembassiesbomb #Madridembassiesthreat
Tags:    

Similar News