செய்திகள்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது

Published On 2019-04-10 23:33 GMT   |   Update On 2019-04-10 23:33 GMT
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. #NewZealand #GunLaw
வெலிங்டன்:

நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர்.

உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும் விற்பனையில் கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது.

அதன்படி துப்பாக்கி சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்படும் என பிரதமர் ஜெசிந்தா உறுதி அளித்தார். இதற்கிடையில் அங்கு பாதியளவு தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ரக துப்பாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேறியது.
Tags:    

Similar News