செய்திகள்

அமெரிக்க நிறுவனத்தில் மோசடி - இந்திய வம்சாவளி அதிகாரி கைது

Published On 2019-03-07 00:37 GMT   |   Update On 2019-03-07 00:37 GMT
அமெரிக்க நிறுவனத்தில் இணையம் வாயிலாக 9.3 பில்லியன் டாலர் மோசடி செய்தது தொடர்பாக இந்திய வம்சாவளி அதிகாரி கைது செய்யப்பட்டார். #CiscoEmployee #Fraud
நியூயார்க்:

அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சிஸ்கோ. இந்த நிறுவனத்தில் சர்வதேச வினியோக பிரிவில் இயக்குனராக பணியாற்றி வந்தவர் பிரித்விராஜ் பிகா (வயது 50). இந்திய வம்சாவளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு மத்தியில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.



இந்த நிலையில் பணியில் இருந்த காலத்தில் பிரித்விராஜ் பிகா, இணையம் வாயிலாக 9.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 கோடியே 43 லட்சத்து 85 ஆயிரத்து 200) வரை மோசடி செய்தது சமீபத்தில் தெரியவந்தது.

இதையடுத்து, பிரித்விராஜ் பிகாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், சுமார் ரூ.2 கோடி அபராதமும் விதிக்கப்படலாம் என தெரிகிறது.
Tags:    

Similar News