செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 16 பேர் பலி

Published On 2019-03-06 09:41 GMT   |   Update On 2019-03-06 09:41 GMT
ஆப்கானிஸ்தானில் இன்று காலை கட்டுமான நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். #AfghanistanMillitantAttack
காபூல்:

கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் விமான நிலையத்திற்கு அருகே கட்டுமான நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் மீது பயங்கரவாதிகள் இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். பின்னர், சில பயங்கரவாதிகள் நிறுவனத்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் இன்று அதிகாலை 5 மணி அளவில் துவங்கி 10.30 மணி வரை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலை 5 பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனர். இவர்களில் 2 பேர் தங்கள் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். மற்ற 3 பயங்கரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதல் நிறைவடைந்த நிலையில், தற்போது ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலை குறைக்கும் வகையில் போலீசார் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. எனினும், கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் அல்லது ஐஎஸ் அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. #AfghanistanMillitantAttack
Tags:    

Similar News