செய்திகள்

டெல்லியில் இருந்து சென்ற ஜப்பான் விமானம் தரை இறங்கும்போது விபத்து

Published On 2019-02-01 09:02 GMT   |   Update On 2019-02-01 09:02 GMT
டெல்லியில் இருந்து நாரிடாவுக்கு சென்ற ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தரை இறங்கும் போது விபத்துக்குள்ளானது. இதில் 201 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். #JapanAirlinesFlight #NaritaAirport
டோக்கியோ:

டெல்லியில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள நாரிடாவுக்கு ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. அதில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 201 பேர் இருந்தனர்.

விமானம் தரை இறங்கிய போது ஓடுதளத்தில் பனி உறைந்து கிடந்தது. இதனால் விமானம் சறுக்கி தாறுமாறாக ஓடி மோதியது. இதனால் அங்கு பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடனே அங்கு மீட்பு படையினர் விரைந்து வந்தனர். விமானத்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கீழே இறங்கினர்.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. பலத்த காயம் எதுவும் இன்றி அனைவரும் உயிர் தப்பினர். இந்த தகவலை விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நாரிடா விமான நிலையத்தில் 2 ஓடு தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. நிலைமை சீரானதும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. #JapanAirlinesFlight #NaritaAirport
Tags:    

Similar News