செய்திகள்

குச்சிகளை பயன்படுத்தி மோடிக்கு சாப்பிட கற்றுத்தந்த ஜப்பான் பிரதமர்

Published On 2018-10-29 03:22 GMT   |   Update On 2018-10-29 03:22 GMT
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே அவரது இல்லத்தில் குச்சிகளை பயன்படுத்தி எப்படி சாப்பிடுவது என்பதை கற்றுத் தந்ததாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். #JapanesePMAbe #NarendraModi
டோக்கியோ :

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே நேற்று யமனாஷி நகரில் உள்ள தனது சொந்த இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். அப்போது அவருக்கு இரவு நேர உணவு வழங்கி உபசரித்தார்.

வழக்கமாக ஜப்பானியர்கள் ‘சாப்ஸ்டிக்ஸ்’ என்னும் 2 குச்சிகளை பயன்படுத்தி அதன் மூலம் உணவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவது வழக்கம். பிரதமர் மோடிக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளுடன் இதேபோல் குச்சிகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதைக்கொண்டு எவ்வாறு சாப்பிடுவது என்பது தெரியாமல் மோடி சற்று தயங்கினார்.

அப்போது ஜப்பானிய முறைப்படி குச்சிகளை பயன்படுத்தி எவ்வாறு சாப்பிடுவது என்று ஷின்ஜோ அபே மோடிக்கு விளக்கமாக கற்றுக் கொடுத்தார். அதை ஆர்வத்துடன் அறிந்து கொண்ட மோடியும் அதேபோல் உணவை ருசி பார்த்தார்.

இந்த தகவலை பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். #JapanesePMAbe #NarendraModi
Tags:    

Similar News