செய்திகள்

படகு விபத்து பலி 136 ஆனது - படகு உரிமையாளரை கைது செய்ய தான்சானியா அதிபர் உத்தரவு

Published On 2018-09-22 07:37 GMT   |   Update On 2018-09-22 07:37 GMT
தான்சானியாவில் படகு விபத்து பலி 136 ஆக அதிகரித்த நிலையில் படகு உரிமையாளரை கைது செய்ய அந்நாட்டு அதிபர் உத்தரவிட்டுள்ளார். #LakeVictoriaFerryAccident

லேக்விக்டோரியா:

ஆப்பிரிக்காவில் லேக் விக்டோரியாவில் ஒரு சொகுசு படகு ஒன்று 400 பயணிகளை ஏற்றிச்சென்று கொண்டிருந்தது. உகாரா தீவு அருகே சென்றபோது படகு மூழ்க தொடங்கியது.

அதை அறிந்த பயணிகள் உயிர் பிழைக்க அங்குமிங்கும் ஓடினர். அதனால் நிலை தடுமாறிய படகு ஏரியில் மூழ்கியது.

தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும், நீர்மூழ்கி வீரர்களும் விரைந்து வந்து பலரை மீட்டனர். இருந்தும் 136 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.


 

மீட்பு பணியில் ராணுவ நீர்மூழ்கி நீச்சல் வீரர்கள், மீனவர்கள், போலீசார் மற்றும் தனியார் படகுகள் ஈடுபட்டுள்ளன.

விபத்து தொடர்பாக படகு நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்ய அதிபர் உத்தரவிட்டுள்ளார். #LakeVictoriaFerryAccident

Tags:    

Similar News