செய்திகள்

இஸ்ரேலில் இன பாகுபாட்டை அதிகரிக்கும் புதிய சட்டம் - அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம்

Published On 2018-08-12 10:41 GMT   |   Update On 2018-08-12 10:41 GMT
இஸ்ரேல் நாட்டில் யூதர்களுக்கு மட்டுமே அதிக முன்னிரிமை அளித்து உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டத்தை எதிர்த்து பல்லாயிரக்கணக்கானோர் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். #Isreal
ஜெருசலேம்:

இஸ்ரேலின் பூர்வீக குடிகளாக கருதப்படும் ஜெவிஸ் சமூகத்தினருக்கு மட்டுமே அந்நாட்டின் சுய உரிமை அளிக்கப்படுவதாக புதிதாக சட்டம் இயற்றப்பட்டது. மேலும், இந்த சட்டத்தின் மூலம் அரபி மொழி அலுவல் மொழிகளின் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் வாழும் அரேபியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இங்கு வாழும் அரேபியர்கள் பாலஸ்தீன நாட்டைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பிறகு இவர்கள் இங்கு குடியேறியதாகவும் தெரிகிறது.

இஸ்ரேல் அரசின் இந்த சட்டத்தை எதிர்த்து ட்ரஸ் எனப்படும் இஸ்ரேலில் வாழும் பழங்கால அரபியர்கள் கடந்த வாரம் மிகப்பெரிய போராட்டத்தினை நடத்தினர். இந்த போராட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இந்த சட்டம் குறித்து பேசிய அந்நாட்டின் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்த சட்டத்தின் மூலமே ஜெவிஸ் மக்களின் சுய உரிமைகள் பாலஸ்தீன அரேபியர்களால் தடுக்கப்படுவதை தவிர்க்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் டெல் அவிவ் என்ற இடத்தில் மாபெரும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இந்த சட்டம், இனவாதத்தை சட்டப்பூர்வமாக்குவதாக அவர்கள் கண்டனம் தெரிவித்தனர். #Isreal
Tags:    

Similar News