செய்திகள்

ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு - பிரிட்டன் பிரதமருக்கு டிரம்ப் அட்வைஸ்

Published On 2018-07-15 11:47 GMT   |   Update On 2018-07-15 11:47 GMT
பிரெக்சிட் விவகாரத்தில் அடிபணிந்து விடாமல் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் தனக்கு அறிவுறுத்தியதாக தெரசா மே குறிப்பிட்டுள்ளார்.#Trump #TheresaMay #suetheEU #Brexit
லண்டன்:

பிரிட்டன் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டு பிரதமர் தெரசா மேவுடன் இணைந்து கூட்டாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது உரையாற்றிய டிரம்ப், பிரிட்டன் பிரதமர் தெரசா மேவிடம் நான் ஒரு ஆலோசனையை தெரிவித்தேன். ஆனால், அது காட்டுமிராண்டித்தனமானது என்று கூறிய தெரசா மே எனது ஆலோசனையை நிராகரித்து விட்டார் என குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு டிரம்ப் கூறிய ஆலோசனை என்ன? என்பது தொடர்பாக தெரசா மே இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பி.பி.சி. நிருபரின் கேள்விக்கு பதிலளித்த தெரசா மே, ‘பிரெக்சிட் விவகாரத்தில் அடிபணிந்து விடாமல் ஐரோப்பிய யூனியன் மீது வழக்கு தொடருமாறு டிரம்ப் எனக்கு அறிவுறுத்தினார். அதற்கு மறுப்பு தெரிவித்த நான், பேச்சுவார்த்தை மூலமாகவே பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்புவதாக கூறி விட்டேன்’ என குறிப்பிட்டுள்ளார். #Trump #TheresaMay #suetheEU #Brexit
Tags:    

Similar News