செய்திகள்

செக்ஸ் புகாரில் சிக்கிய பிரிட்டன் மந்திரி ராஜினாமா

Published On 2018-07-15 08:57 GMT   |   Update On 2018-07-15 08:57 GMT
பெண்களுக்கு ஆபாச மெஸேஜ்களை அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரி ஆன்ட்ரு கிரிபித்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். #AndrewGriffithsminister
லண்டன்:

பிரிட்டன் நாட்டு சிறுவர்த்தகங்கள் துறை மந்திரியாக பதவி வகித்தவர் ஆன்ட்ரு கிரிஃபித்ஸ். பர்டன் பாராளுமன்ற தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இதற்கு முன்னதாக கடந்த 2004-2006 ஆண்டுவாக்கில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அவை முன்னவராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில், பிரபல சமூக ஊடகமான ‘ஸ்னாப்சாட்’டில் இரு பெண்களை பின்தொடர்ந்து வரும் ஆன்ட்ரு, அவர்கள் பதிவு செய்த சில கருத்துகளுக்கு எதிராக ஆபாச பதில்களை பதிவிட்டு வந்துள்ளார்.



அந்த பெண்களின் இன்ஸ்ட்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் கடந்த மூன்றுவார காலத்தில் சுமார் 2 ஆயிரம் கருத்துகளை ஆன்ட்ரு பதிவு செய்தார். இவற்றில் பெரும்பாலனவை பாலியல் நோக்கம் கொண்டதாகவும், ஆபாசமாகவும் இருந்ததால் அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்நிலையில், கட்சியின் நற்பெயருக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் ஏற்படுவதை தடுக்கும் வகையில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளதாக பிரதமர் தெரசா மேவுக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார். #AndrewGriffithsminister 
Tags:    

Similar News