செய்திகள்

நிகாரகுவாவில் அதிபருக்கு எதிராக போராட்டம் - துப்பாக்கி சூட்டில் மாணவர் பலி

Published On 2018-07-15 06:48 GMT   |   Update On 2018-07-15 06:48 GMT
தென் அமெரிக்காவில் உள்ள நிகாரகுவாவ நாட்டில் அதிபரை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்துக்கு திரண்ட மாணவர்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியல் ஒரு மாணவர் உயிரிழந்தார். #Nicaragua
மசாயா:

தென் அமெரிக்க நாடான நிகாரகுவாவில் அதிபராக டேனியல் ஓர்டெகா பதவி வகிக்கிறார். இவர் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இது வரை 300 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், நாடு தழுவிய ஒருநாள் வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து தலைநகர் மனாகுவாவில் போராட்டம் வலுவடைந்தது. அதில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

ஆயிரக்கணக்காக திரண்ட மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவம் அனுப்பப்பட்டது. அப்போது அங்கு வந்த ராணுவம் மாணவர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியது.

இதனால் மிரண்டு ஓடிய மாணவர்கள் பல்கலைக்கழகம் அருகேயுள்ள கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்தனர். பின்னர் தேவாலயத்தின் கதவுகள் மூடப்பட்டன. மாணவர்களுடன் பாதிரியார்கள் மற்றும் நிருபர்களும் தஞ்சம் அடைந்தனர்.

ஆனால் ராணுவமும் போலீசாரும் அவர்களை விடாமல் தேவாலயத்தை சுற்றி முற்றுகையிட்டு தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் மாணவர் ஒருவர் பலியானார். அதே நேரத்தில் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்ததாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான மாணவர் பெயர் ஜெரால்டு என்றும், அவர் மசாயா பகுதியைச் சேர்ந்தவர் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது படத்துடன் கூடிய செய்தியை டுவிட்டரில் பி.பி.சி. நிறுவன நிருபர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News