செய்திகள்

ரஷிய அதிபராக நான்காவது முறை பதவியேற்ற புதினுக்கு டிரம்ப் வாழ்த்து

Published On 2018-05-08 09:07 GMT   |   Update On 2018-05-08 09:07 GMT
ரஷியாவின் அதிபராக நான்காவது முறை பதவியேற்ற விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். #TrumpcongratulatesPutin
வாஷிங்டன்:

ரஷியாவின் அதிபர் பதவிக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்ட விளாடிமிர் புதின் 76.7 சதவீதம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அந்நாட்டின் அதிபராக நேற்று நான்காவது முறையாக பதவியேற்ற புதின் வரும் 2024-ம் ஆண்டுவரை இந்த பொறுப்பில் நீடிப்பார்.

இந்நிலையில், விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலாளர் சாரா சான்டர்ஸ், ‘ரஷிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு உருவாகும் காலத்தை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளார்’ என்று குறிப்பிட்டார். #TrumpcongratulatesPutin 
Tags:    

Similar News