செய்திகள்

கவுதமாலா அதிபர் ஜிம்மி மொரலசுடன் வெங்கையா நாயுடு சந்திப்பு

Published On 2018-05-07 19:45 GMT   |   Update On 2018-05-07 19:45 GMT
கவுதமாலா நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அந்நாட்டு அதிபர் ஜிம்மி மொராலசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Guatemala
கவுதமாலா சிட்டி:

துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற வெங்கையா நாயுடு, முதல் முறையாக கவுதமாலா நாட்டுக்கு நேற்று முன்தினம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லியில் இருந்த புறப்பட்ட அவர் ஸ்பெயின் வழியாக கவுதமாலா நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெசை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்தார். அப்போது இருதரப்புக்கு இடையிலான உறவுகள் வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபாரை சந்தித்து வெங்கையா நாயுடு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து பனாமா மற்றும் பெரு நாட்டுக்கு செல்லும் வெங்கையா நாயுடு 12-ம் தேதி இந்தியா திரும்புகிறார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Guatemala
Tags:    

Similar News