செய்திகள்

அமெரிக்காவில் வாலிபருக்கு 241 ஆண்டு ஜெயில்- மேல்முறையீட்டில் உறுதி

Published On 2018-04-25 08:01 GMT   |   Update On 2018-04-25 08:01 GMT
அமெரிக்காவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல குற்றங்களில் சிறை தண்டனை அனுபவித்து வந்த வாலிபருக்கு 241 ஆண்டுகள் ஜெயில் தண்டனை மேல்முறையீட்டின் மூலம் உறுதி செய்யப்பட்டது. #BobbyBostic
நியூயார்க்:

அமெரிக்காவை சேர்ந்த பாபி போஸ்டிக் இவர் துப்பாக்கியால் சுட்டு கொலை, கொள்ளை மற்றும் கார் திருட்டு உள்ளிட்ட பல குற்றங்களில் ஈடுபட்டு வந்தார்.

கடந்த 1997-ம் ஆண்டு இவரை போலீசார் கைது செய்தனர். அப்போது இவரது வயது 16. இந்த நிலையில் அவர் மீதான புகார்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 241 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

எனவே அவர் தொடர்ந்து சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் அவர் மேல் முறையீடு செய்தார்.

வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது. மேலும் அவருக்கு 112 ஆண்டுகள் வரை பரோல் வழங்கவும் அனுமதி மறுத்து தீர்ப்பளித்தது. #BobbyBostic
Tags:    

Similar News