செய்திகள்

தாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது - பெண்டகன்

Published On 2018-04-13 05:24 GMT   |   Update On 2018-04-13 05:24 GMT
தாலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாகிஸ்தான் உள்ளது என அமெரிக்க நாடாளுமன்ற குழுவிடம் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாத் உத்தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் தாலிபான், ஹக்கானி பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.

இதே குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியையும் அவர் நிறுத்தி வைத்தார். இதன் காரணமாக, அமெரிக்கா - பாகிஸ்தான் இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்பட்டது. எனினும், அந்த சூழலில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றது.

இந்நிலையில், அமெரிக்க பாராளுமன்ற நிலைக்குழுவிடம் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் மார்க் மில்லே பாகிஸ்தான் தொடர்பான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், ஆப்கானிஸ்தான் எல்லையோர பாகிஸ்தானிய மாகாணங்களில் தாலிபான் மற்றும் ஹக்கானி அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட்டு வருகின்றன. எல்லா வசதிகளும் அவர்களுக்கு கிடைக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு பயங்கரவாத குழு ஒரு நாட்டை சொர்க்கமாக கொண்டிருந்தால் அந்த குழுவை அகற்றுவது மிக கடினம். ஆனால், தற்போது தாலிபான், ஹக்கானி குழுக்கள் பாகிஸ்தானை சொர்க்கமாக கொண்டிருக்கின்றன. இதனை முடிவுக்கு கொண்டுவர பாகிஸ்தானின் பங்களிப்பு தேவை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #Pakistan #US #TamilNews
Tags:    

Similar News