செய்திகள்

இந்தியா-ரஷியா உறவை பலப்படுத்துவதில் இந்திரா காந்தி பெரும் பங்காற்றினார் - சோனியா காந்தி புகழாரம்

Published On 2018-04-11 11:26 GMT   |   Update On 2018-04-11 11:26 GMT
ரஷியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சோனியா காந்தி இந்தியா-ரஷியா இடையிலான உறவுகளை பலப்படுத்தியதில் மறைந்த இந்திரா காந்தியின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார். #indiragandhi #soniagandhi
மாஸ்கோ:

ரஷியாவின் மாஸ்கோ நகரில் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் இந்திரா காந்தி கண்காட்சி விழா நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியில் இந்திரா காந்தியின் வாழ்க்கையை விளக்கும் வகையில் ஏராளமான புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.

இவ்விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை புகழ்ந்து பேசினார். அப்போது பேசிய அவர், 'இந்தியா-ரஷியா இடையே நல்ல உறவு உள்ளது. இந்திரா காந்தி இந்தியா - ரஷியா இடையேயான உறவை பலப்படுத்துவதில் பெரும் பங்காற்றினார். வங்காள தேசம் இடையே போர் நடைபெற்ற போது ரஷியா இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது. இந்த ஆதரவு ரஷியா இடையேயான உறவை இந்திரா காந்தி அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல செய்தது.



இந்திரா காந்தி அமைதிக்காகவும், அணு ஆயுதங்களை ஒழிக்கவும் பாடுபட்டார். அவருக்கு பல்வேறு துறைகளில் ஆர்வம் இருந்தது. இதனால் ரஷியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் நண்பர்களாக இருந்தனர்.

இந்திரா காந்திக்கும், ரஷிய தலைவர்களுக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இந்த கண்காட்சியின் மூலம் அவர்களின் அரசியல் வாழ்க்கை அனைவருக்கும் தெரிய வரும். வெளிநாட்டில் இந்திரா காந்தி கண்காட்சி நடத்திய முதல் நாடு ரஷியா தான். ரஷியாவில் பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு இந்திரா காந்தி பெயரை வைத்துள்ளனர். இது இந்திரா காந்திக்கும், ரஷியாவுக்கும் இடையே உள்ள உறவிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த உறவு மேலும் தொடரும்' என கூறினார்.  #indiragandhi #soniagandhi

Tags:    

Similar News