என் மலர்

  நீங்கள் தேடியது "Indira gandhi"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

  சோனியா காந்தி மரியாதை


  இந்திரா காந்தி 1966-ம் ஆண்டு மற்றும் 1977-ம் ஆண்டு இடைப்பட்ட காலத்திலும், பின்னர் 1980-ம் ஆண்டு மற்றும் 1984-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்திலும் பிரதமராக இருந்தார்.

  இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அரசியல் தலைவர்கள் பலர் டுவிட்டரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

  அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் பிறந்தநாளில், அவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திரா காந்தியை போல பிரதமர் மோடி தோற்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

  லக்னோ:

  உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பாராளுமன்ற தொகுதியில் 1977-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி போட்டியிட்டார். அவர் பாரதிய லோக் தளம் கட்சியை சேர்ந்த ராஜ் நாராயணனால் தோற்கடிக்கப்பட்டார்.

  இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நடந்தது போல இப்போது வாரணாசி தொகுதியில் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து உள்ளார்.

  இது தொடர்பாக மாயாவதி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

   


  உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியில் எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. அங்குள்ள மக்கள் அனைவரையும் முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத்தும், பிரதமர் நரேந்திர மோடியும் ஏமாற்றி விட்டனர். கோரக்பூர் பாராளுமன்ற தொகுதியில் யோகி ஆதித்யநாத்தை மக்கள் நிராகரித்தனர்.

  பிரதமர் மோடியின் வெற்றியைவிட அவரது தோல்வி வரலாற்று சிறப்பு மிக்கதாக இருக்கும். 1977-ம் ஆண்டு ரேபரேலி தொகுதியில் நிகழ்ந்தது இப்போது வாரணாசிதொகுதியில் மீண்டும் நிகழுமா?

  குஜராத்தின் வளர்ச்சியை போல கிழக்கு உத்தரபிரதேசத்தின் வறுமை, வேலை வாய்ப்பின்மை உள்ளிட்டவற்றை நீக்கவில்லை. மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதை விடுத்து வகுப்பு வாரியான வன்முறையையும், ஜாதி ரீதியான கலவரத்தையும் மத்திய, மாநில பா.ஜனதா அரசுகள் தூண்டி விடுகின்றன. இது மிகவும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
  புதுடெல்லி:

  பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

  டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன்.  என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.

  இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது என்று பாஜக மந்திரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

  ஆமதாபாத்:

  குஜராத் மாநிலம் அனந்த் பகுதியில் மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

  அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவை மிக கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

  இந்திராகாந்தி போன்று பிரியங்காவுக்கும் மூக்கு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் மிகவும் பெருமையாக சொல்லி கொள்கிறார்கள். இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருந்து விட்டால் போதுமா?

  அந்த மூக்கை வைத்துக் கொண்டு எப்படி வெற்றி பெற முடியும். பாட்டி மாதிரி ஒரே மாதிரி மூக்கு இருந்து விட்டால் அரசியலில் ஒரு போதும் வெற்றி பெற்று விட முடியாது. இதை பிரியங்கா உணர்ந்து கொள்ள வேண்டும்.


  சீனாவில் எல்லாரது முகமும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அவர்கள் மூக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது. அதற்காக வீடு தோறும் சீனா ஜனாதிபதி இருக்கிறார் என்று சொல்லி விட முடியுமா?

  ஆகையால் ஒரே மாதிரி மூக்கு என்று சொல்லிக் கொண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விடலாம் என்று கனவு காணக்கூடாது. அரசியலில் மேன்மை பெற தனி தகுதி வேண்டும்.

  இவ்வாறு மத்திய மந்திரி மன்சூக்மந்தவியா பேசினார்.

  இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

  கடந்த மாதம் பா.ஜனதா எம்.பி. ஹரிஸ்திவேதி பேசுகையில், “பிரியங்கா டெல்லியில் இருக்கும்போது ஜீன்ஸ் போட்டுக் கொள்கிறார். தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் சேலை அணிகிறார். எதற்காக இந்த இரட்டை வேடம் போடுகிறார்” என்று கேட்டு இருந்தார். இந்த பேச்சும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #BJP #LokSabhaElections2019 #LSPolls

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரையிலான கங்கை நதி யாத்திரையை தொடங்கிய பிரியங்கா, தனது பாட்டியான இந்திராவை நினைத்து நெகிழ்ச்சியடைந்தார். #PriyankaGandhi #IndiraGandhi #Congress
  பிரயாக்ராஜ்:

  தீவிர அரசியலில் சமீபத்தில் இணைந்த பிரியங்கா, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகவும், உத்தரபிரதேச கிழக்குப்பகுதிக்கு கட்சியின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மாநிலத்தில் அவர் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

  இதில் முதற்கட்டமாக கங்கை நதியில் படகுமூலம் சென்று கரையோர மக்களின் ஆதரவை திரட்ட விரும்பிய அவர் இதற்காக 3 நாள் கங்கை நதி யாத்திரையை நேற்று தொடங்கினார். இதில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினமே அவர் லக்னோ சென்றடைந்தார். பின்னர் மாலையில் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார்.  இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இருந்து தனது பிரசார பயணத்தை தொடங்கினார். இதற்காக கட்சிக்கொடிகள் மற்றும் தோரணங்களுடன் படகு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த படகில் கட்சியினருடன் இணைந்து சென்று மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

  முன்னதாக திரிவேணி சங்கமத்தில் உள்ள அனுமன் கோவிலில் பிரியங்கா வழிபாடு செய்தார். மேலும் அங்குள்ள ஸ்வராஜ் இல்லத்துக்கு சென்ற அவர், தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்திக்கும், ஸ்வராஜ் இல்லத்துக்குமான தொடர்புகளை நினைவுகூர்ந்து தனது டுவிட்டர் தளத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டார்.

  இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சுவராஜ் பவன் முற்றத்தில் அமர்ந்திருக்கும் போது, எனது பாட்டி (இந்திரா காந்தி) பிறந்த அறையை பார்க்க முடிகிறது. இங்கு வைத்துதான் நான் தூங்குவதற்காக அவர் மடியில் என்னை படுக்க வைத்து கதைகளை கூறுவார். அவரது வார்த்தைகள் இன்னும் எனது காதில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ‘எதற்கும் அஞ்சக்கூடாது, எல்லாம் சரியாகிவிடும்’ என அவர் சொல்லித்தருவார்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

  பிரியங்காவின் கங்கை யாத்திரை நாளை (புதன்கிழமை) வாரணாசியில் நிறைவு பெறுகிறது. இந்த யாத்திரை மாநில காங்கிரசாருக்கு உற்சாகத்தை அளித்து இருக்கிறது. இதனால் கங்கை நதிக்கரையில் பிரியங்கா செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.  #PriyankaGandhi #IndiraGandhi #Congress

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது. #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
  மும்பை:

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.

  தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார். 
   
  பிரியங்காவுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள்  என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷா கயாண்டே கூறுகையில், பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி குணங்கள் தென்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியின் முகத்தை காண்பார்கள் என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. #antiSikhriotscase
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராக வெடித்த கலவரம் தொடர்பான வழக்கில் முதல்முறையாக இன்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி, கடந்த 31-10-1984-ம் அன்று டெல்லியில் உள்ள தனது வீட்டில் சீக்கிய பாதுகாவலர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

  இந்த படுகொலைக்குப்பிறகு சீக்கியர்களுக்கு எதிராக நாடு முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் நடந்தன. இதில் 2800 சீக்கியர்கள் பலியாகினர். டெல்லியில் மட்டும் 2100 சீக்கியர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர்.

  இந்த கலவரம் தொடர்பாக டெல்லி கோர்ட்டில் நடந்துவந்த வழக்கு விசாரணையில் முதல்முறையாக ஒருவருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

  டெல்லியில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இருவரை உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் டெல்லி போலீசார் போதிய ஆதாரங்கள் இல்லை என வழக்கை முன்னர் மூடி விட்டனர். எனினும், சிறப்பு புலனாய்வு படையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.  இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த டெல்லி கூடுதல் அமர்வு நீதிபதி அஜய் பான்டே, குற்றவாளி யஷ்பால் சிங் என்பவருக்கு மரண தண்டனையும், அவருக்கு உடந்தையாக இருந்த ஓய்வுபெற்ற போஸ்ட் மாஸ்டர் நரேஷ் ஷெராவத் என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்தும் தீர்ப்பளித்துள்ளார். இருவருக்கும் தலா 35 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

  இந்த தீர்ப்புக்கு டெல்லியில் உள்ள பல்வேறு சீக்கிய அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

  இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்றுவந்த 241 வழக்குகளும் முன்னர் முடித்து வைக்கப்பட்டன.

  இவற்றில் 186 வழக்குகள் உரிய விசாரணை நடத்தாமலேயே முடித்து வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின்கீழ், இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பதற்காக கண்காணிப்பு குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட் நியமித்தது.

  இந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை இன்று ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட் மேற்படி 186 வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #antiSikhriotscase #Delhicourt #firstdeathsentence #deathsentence
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மரியாதை செலுத்தினர். #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
  புதுடெல்லி:

  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இதேபோல் நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகங்கள், கிளை அலுவலங்கள், பல்வேறு அமைப்புகள் சார்பில் இந்திரா காந்தி பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது உருவச் சிலைகள் மற்றும் உருவப்படங்களுக்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டுவருகிறது.

  இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

  இதேபோல் இந்திரா காந்தியின் செயல்பாடுகளை பாராட்டியும், அவரது பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டும் பலர் அவரை நினைவு கூர்ந்துள்ளனர்.  #IndiraGandhi #SoniaGandhi #RahulGandhi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
  புதுடெல்லி:

  இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் அவரது திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.  டெல்லியில் உள்ள இந்திராகாந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

  இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநில கமிட்டி அலுவலகங்களில் இந்திரா காந்தியின் உருவப்படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. #IndiraGandhi #RahulGandhi #SoniaGandhi #Congress
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. #Parliament #NoConfidenceMotion
  புதுடெல்லி:

  மத்தியில் ஆட்சி செய்யும் அரசு மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கையில்லாத எண்ணம் ஏற்பட்டால், பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர சட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளது.

  பாராளுமன்ற இரு அவைகளில் மக்களவையில் மட்டுமே இத்தகைய தீர்மானத்தை கொண்டு வர முடியும்.

  பாராளுமன்றத்தில் 50 எம்.பி.க்களின் ஆதரவுடன் தான் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர இயலும். அந்த தீர்மானம் மீது பாராளுமன்ற சட்ட விதி 198-வது பிரிவின் கீழ் விவாதம் நடந்து ஓட்டெடுப்பு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.

  எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயகரின் இறுதி முடிவுக்கு உட்பட்டதாகும். அதுபோல நம்பிக்கையில்லா தீர்மானம் மீது எப்போது, எப்படி ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற அனைத்தையும் சபாநாயகரே முடிவு செய்வார். ஒவ்வொரு கட்சி தலைவர்களும் விவாதத்தில் பேச நேரம் ஒதுக்கி கொடுப்பதும் சபாநாயகர்தான்.

  அதன்படி இந்திய பாராளு மன்றவரலாற்றில் இதுவரை 27 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடந்து வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திராகாந்தி, மெரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்மராவ், வாஜ்பாய், மோடி ஆகிய 8 பிரதமர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டுள்ளனர்.

  பாராளுமன்றத்தில் பிரதமர் நேரு 1963-ம் ஆண்டு முதல் முதலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர் கொண்டார். அதுதான் முதல் நம்பிக்கையில்லா தீர்மானமாகும். ஜே.பி.கிருபாளினி கொண்டு வந்த அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது.


  அதிகபட்ச நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தவர் இந்திராகாந்தி ஆவார். அவர் மொத்தம் 15 தடவை நம்பிக்கையில்லா தீர்மான சவால்களை சந்தித்தார். அந்த 15 தடவையும் இந்திராகாந்தி வெற்றி பெற்றார்.

  அவர் அரசு மீது 1966-ம் ஆண்டு முதல் 1975-ம்ஆண்டு வரை 9 ஆண்டுகளில் 12 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. 1981-ம் ஆண்டு முதல் 1982-ம் ஆண்டுக்குள் 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொண்டார்.

  லால்பகதூர் சாஸ்திரி, நரசிம்மராவ் இருவரும் தலா 3 தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அந்த 3 தடவையும் அவர்கள் வெற்றி பெற்றனர்.

  1993-ம் ஆண்டு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து நரசிம்மராவ் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

  அந்த தீர்மானம் மீது நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மிக, மிக குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார். அதாவது நரசிம்மராவுக்கு ஆதரவாக 265 வாக்குகளும் எதிராக 251 வாக்குகளும் கிடைத்தது. இதனால் 14 வாக்குகள் வித்தியாசத்தில் நரசிம்மராவ் வெற்றி பெற்றார்.

  வாஜ்பாய், ராஜீவ்காந்தி இருவரும் தலா ஒரு தடவை நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்தித்தனர். அதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1999-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் பெரும் பான்மையை நிரூபிக்க நடந்த ஓட்டெடுப்பில் வாஜ்பாய் தோல்வியை தழுவினார்.

  1967 மற்றும் 1992-ம் ஆண்டுகளில் காங்கிரஸ் பிரதமர்களை எதிர்த்து வாஜ்பாய் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வாஜ்பாய் 2003-ம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

  நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவிய ஒரே பிரதமர் மெரார்ஜி தேசாய் ஆவார். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டன. இதனால் அவர் ஓட்டெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்பே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

  பாராளுமன்றத்தில் அதிக தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தவர் என்ற பெருமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர் ஜோதிர்மாய் பாசுக்கு உண்டு. அவர் பாராளுமன்றத்தில் 4 தடவை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். 4 தடவையும் இந்திராவுக்கு எதிராக அவர் தீர்மானம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

  பிரதமர்களில் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும், விவாதத்தையும், ஓட்டெடுப்பையும் சந்திக்காத ஒரே பிரதமர் என்ற தனி சிறப்பு மன்மோகன்சிங்குக்கு உண்டு. 10 ஆண்டுகளாக பிரதமராக இருந்த அவரை எதிர்த்து ஒரு தடவை கூட பா.ஜ.க.வினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Parliament #NoConfidenceMotion
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார் என்று இந்திரா காந்தி குறித்த மத்திய மந்திரி அருண்ஜெட்லி கருத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா பதிலடி கொடுத்துள்ளார்.
  புதுடெல்லி:

  இந்தியாவில் கடந்த 1975-ம் ஆண்டு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் மீதும், இந்திராகாந்தி குடும்பத்தினர் மீதும் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

  அதேபோல் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை போன்றவர் இந்திராகாந்தி என்று மத்திய மந்திரி அருண்ஜெட்லி கருத்து தெரிவித்திருந்தார்.

  பிரதமர் மோடி மற்றும் அருண்ஜெட்லியின் கருத்துக்களுக்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

  முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி மிக உயர்ந்த தலைவர். நெருக்கடி நிலை குறித்து அவரே வருத்தம் தெரிவித்துள்ளார். சர்வாதிகாரிகள் தேர்தல் நடத்துவது இல்லை. இந்திரா காந்தி நெருக்கடி நிலையை வாபஸ் பெற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தினார். அதில் தோல்வியை தழுவினாலும் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டார்.


  ஆர்.எஸ்.எஸ்.- பாரதிய ஜனதா பள்ளியில் படித்த அருண்ஜெட்லி சர்வாதிகாரி ஹிட்லரையும், அவரது கொள்கைகளையும் போற்றுபவர். கடந்த 1980-ம் ஆண்டு மக்கள் மீண்டும் இந்திரா காந்திக்கு பெரும்பான்மை ஆதரவு அளித்தனர். மக்கள் மனதில் இன்னும் இந்திரா காந்தி ஹீரோவாக உள்ளார்.

  பிரதமர் மோடி தற்போது சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சியில் ஜனநாயகம் கேள்விக் குறியாகி உள்ளது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜீவாலா கூறியதாவது:-


  முகலாய மன்னர் அவுரங்க சீப்பையை விட மோசமான சர்வாதிகாரியாக மோடி ஆட்சி நடத்துகிறார். அவர் தற்போது 43 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலை குறித்து நாட்டுக்கு பாடம் நடத்துகிறார். இன்றைய அவுரங்க சீப்பான மோடி நாட்டின் ஜனநாயகத்தை அடிமைப்படுத்தி வைத்துள்ளார். தனது சொந்தக் கட்சியான பா.ஜனதாவிலும் அவர் இதைத் தான் செய்துள்ளார்.

  தனது தோல்விகளையும், மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த பொய்யான வாக்குறுதிகளையும் மூடி மறைப்பதற்காக காங்கிரஸ் மீது அவர் குற்றம் சாட்டுகிறார். இதற்காக வரலாற்றுடன் அவர் விளையாடுகிறார். ஆனால் தாமும் விரைவில் வரலாறு ஆகப் போகிறோம் என்பதை அவர் மறந்துவிட்டார்.

  ஜனநாயகம் பற்றி தனக்கு காங்கிரஸ் பாடம் சொல்லிக் கொடுக்க தேவையில்லை என்று மோடி தெரிவித்துள்ளார். அவுரங்கசீப் யாரிடம் இருந்தும் ஒரு போதும் பாடம் கற்றதில்லை. சர்வாதிகாரிகள் யாரிடம் பாடங்களை கற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு வரலாறுதான் தக்க பாடங்களை கற்பிக்கும். மோடிக்கும் இதே நிலைதான் ஏற்படும்.

  மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் நிதி ஒதுக்கப்பட மாட்டாது என்று மாநிலங்களை பிரதமர் மோடி மிரட்டுகிறார். நாட்டில் கடந்த 49 மாதங்களாக அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. கடந்த 49 மாதங்களில் பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய் என்பது தெரிந்து விட்டது.

  வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்பு பணம் திருப்பி கொண்டு வரப்படவில்லை. மோடி ஆட்சியில் ஜனநாயகம் செத்துக் கொண்டிருக்கிறது.

  நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு பதிலாக அதில் இடையூறுகளை ஏற்படுத்தும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

  43 ஆண்டுகளுக்கு முன்பு நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டதற்கு ஜனதா கட்சியே காரணம். அந்த கட்சி வசதி படைத்தவர்களுக்கும், ஜமீன்தாரர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டது. எனவே ஏழைகள், தலித்துகள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்கவே அப்போது நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. மோடியின் அரசு பெரு முதலாளிகளை பாதுகாக்கிறது.

  1975-ம் ஆண்டில் இந்திரா காந்தி அரசு வறுமைக்கு எதிரான போரை நடத்தியது. வங்கிகளை நலிவடைந்த மக்களும் பயன்படுத்தும் உரிமையை பெற்றுத் தந்தது. ஆனால் மோடியின் ஆட்சியில் எதிர்க்கட்சியினர் ஒடுக்கப்படுகின்றன.

  தங்களை எதிர்ப்போருக்கு கொலை, பாலியல் பலாத்கார மிரட்டல் விடுப்போரை மோடி பின்பற்றுகிறார். எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்காக நாட்டில் ஒருவித அச்சமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார். #Modi #AnandSharma #RandeepSurjewala
  • Whatsapp
  • Telegram
  • Linkedin