செய்திகள்

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் பலி

Published On 2018-03-14 18:16 GMT   |   Update On 2018-03-14 18:16 GMT
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று போலீசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர். #Pakistan #NawazSharif #BlastnearNawazResidence
இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டின் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று போலீசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்தனர்.

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவியை இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தற்போது விசாரணையை எதிர்கொண்டு வருகிறார். லாகூரில் அவருக்கு சொந்தமாக இல்லம் உள்ளது.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்பின் இல்லம் அருகே உள்ள நிசார் போலீஸ் செக் போஸ்ட்டில் நேற்று இரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் மூன்று போலீசார் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் படுகாயமடைந்த சில போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் தற்கொலைப்படை தாக்குதலா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #Pakistan #NawazSharif #BlastnearNawazResidence #tamilnews
Tags:    

Similar News