செய்திகள்

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு

Published On 2018-03-13 17:46 GMT   |   Update On 2018-03-13 17:46 GMT
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஊர்வலம் ஒன்றில் இன்று பேச முற்பட்ட போது அவர் மீது ஷூ வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #ImranKhan #Shoethrown
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான். இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என கட்சி தொடங்கியுள்ளார். பாகிஸ்தான் அரசியலில் அது எதிர்க்கட்சியாக உள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ராத் பகுதியில் இன்று நடந்த ஊர்வலம் ஒன்றில் இம்ரான் கான் கலந்து கொண்டார்.

ஊர்வலத்தின் இடையில் வாகனத்தில் இருந்து உரையாற்ற மைக்கில் பேச முற்பட்ட போது, திடீரென அவர் மீது ஷூ வீசப்பட்டது. அந்த ஷூ அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்த அலீம் கான் மீது பட்டது. இதையடுத்து, இம்ரான் கான் தனது பேச்சை சீக்கிரமாக நிறுத்திக் கொண்டார்.



ஷூ வீசிய நபரை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். ஆனால் அதிக கூட்டம் காரணமாக அவரை பிடிக்க முடியவில்லை. சில தினங்களுக்கு முன்னர் லாகூரில் உள்ள ஒரு மதராசாவில் பேசிய முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது ஷீ வீசப்பட்டது. அதேபோல சியால்கோட் நகரில் பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி காஜா ஆசிப் மீது மை வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ImranKhan #Shoethrown #tamilnews
Tags:    

Similar News