செய்திகள்

நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பந்தாரி இரண்டாவது முறையாக தேர்வு

Published On 2018-03-13 12:44 GMT   |   Update On 2018-03-13 12:44 GMT
இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பித்யா தேவி பந்தாரி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Nepal #BidyaDeviBhandari
காத்மண்டு:

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஜனாதிபதியாக இருந்த பித்யா தேவி பந்தாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, அப்பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில், பித்யா தேவி பந்தாரி இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக போட்டியிட்டார்.

நேபாள காங்கிரஸ் சார்பில் குமாரி லக்‌ஷ்மி ராய் போட்டியிட்டார். 275 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 550 மாகாண சபை உறுப்பினர்கள் ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தனர். நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைகளில் ஆளும் இடதுசாரி கட்சிகளே பெரும்பாண்மையாக உள்ளதால் பித்யா தேவி பந்தாரிக்கே வெற்றி வாய்ப்பு இருந்தது.

இந்நிலையில், பித்யா தேவி பந்தாரி வெற்றி பெற்றுள்ளதாகவும், இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்பார் எனவும் அந்நாட்டு பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. #Nepal #BidyaDeviBhandari #TamilNews
Tags:    

Similar News