செய்திகள்

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய இந்திய வம்சாவளி பெண் தென் ஆப்ரிக்காவில் கைது

Published On 2018-02-26 09:17 GMT   |   Update On 2018-02-26 09:17 GMT
பிரிட்டன் தம்பதிகள் கடத்தப்பட்டது தொடர்பாக இந்திய வம்சாவளி பெண் உள்பட இருவரை தென் ஆப்பிரிக்க போலீசார் கைது செய்துள்ள நிலையில், அவர்களுக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்காவின் வாஸுலு நடால் மாகாணத்தில் கடந்த 12-ம் தேதி பிரிட்டனைச் சேர்ந்த தம்பதி மாயமாகினர். அவர்கள் கடத்தப்பட்டதாக கூறிய பிரிட்டன் தூதரகம், தென் ஆப்ரிக்காவில் வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியது. 

இந்நிலையில், பிரிட்டன் தம்பதி மாயமான வழக்கில் இந்திய வம்சாவளி பெண் பாத்திமா படேல் மற்றும் அவருடன் இருந்த சைப்தீன் அஸ்லாம் ஆகிய இருவரை தென் ஆப்பிரிக்க போலீசார் கைது செய்துள்ளது. பிரிட்டன் தம்பதியினரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தியது, நகை மற்றும் பணத்தை திருடியதாக அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

கைதான சைப்தீன் அஸ்லாம் புறநகர் மற்றும் கிராம பகுதிகளில் ஐ.எஸ் கொடிகளை பறக்கவிடுவது, அந்த அமைப்புக்கு இணையத்தில் ஆதரவு திரட்டுவது போன்ற பணிகளை செய்ததாக போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும், பிரிட்டன் தம்பதியினர் கடத்தப்பட்டதில் மேற்கண்ட இருவரும் சம்மந்தப்பட்டுள்ளனரா? என்பதற்கு போலீசார் சரியான விளக்கம் அளிக்கவில்லை. #TamilNews
Tags:    

Similar News