செய்திகள்

சிறையில் இருந்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹாங்காங்கில் கைது

Published On 2018-02-24 08:20 GMT   |   Update On 2018-02-24 08:20 GMT
2016-ம் ஆண்டு நவம்பரில் 6 பேருடன் சிறையை உடைத்து தப்பிய காலிஸ்தான் பயங்கரவாதி ஹாங்காங்கில் நேற்று கைது செய்யப்பட்டான்.
ஹாங்காங்:

பஞ்சாப் மாநிலம் பதின்டாவை சேர்ந்தவன் ராமன் ஜித்சிங் என்கிற ரோமி.

காலிஸ்தான் பயங்கரவாதி ஆன இவன் ஆர்.எஸ்.எஸ்., சிவசேனா மற்றும் தேரா அமைப்பை சேர்ந்த 7 பேரை படுகொலை செய்தவன். இவன் நபா என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில் தனது கூட்டாளிகள் குர்பிரீத்சிங் சேக்கான், உள்ளிட்ட 6 பேருடன் சிறையை உடைத்து தப்பினான்.

அவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். ஆனால் அவன் சிக்கவில்லை.எங்கு பதுங்கி இருக்கிறான் என்று தெரியாமல் இருந்தது.

இந்த நிலையில் அவன் ஹாங்காங்கில் நேற்று சிக்கினான். அங்கு நடந்த கொள்ளை சம்பவத்தில் அவனை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் இருந்து கார்கள், கைத்துப்பாக்கிகள், போலி கிரெடிட் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவனது பாஸ்போர்ட்டும் கைப்பற்றப்பட்டது. அவனை இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கிறது. #tamilnews
Tags:    

Similar News