செய்திகள்

வேகமாக சாப்பிடுபவருக்கு உடல் குண்டாகும் அபாயம்: ஆய்வில் புதிய தகவல்

Published On 2018-02-24 06:32 GMT   |   Update On 2018-02-24 06:32 GMT
உணவு வகைகளை வேகமாக சாப்பிடுபவர்களுக்கு உடல் குண்டாகும் அபாயம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கியோ:

சிலர் உணவு வகைகளை வேகமாக சாப்பிட்டு முடிப்பார்கள் அவ்வாறு சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல. இதனால் உடல் குண்டாகி விடும் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ஜப்பானை சேர்ந்த நிபுணர்கள் 59,717 பேரிடம் இது பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இவர்கள் 2-ம் ரக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களிடம் 6 ஆண்டுகளாக ஆய்வு நடத்தப்பட்டது.

சாப்பிடும் முறை, மது உபயோகிக்கும் அளவு, தூங்கும் முறை, எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவு உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அவற்றில் மெதுவாக சாப்பிடுபவர்களைவிட வேகமாக சாப்பிடுபவர்களின் உடல் குண்டாக இருப்பது தெரிய வந்தது. #tamilnews

Tags:    

Similar News