செய்திகள்

நேபாளத்தில் மார்ச் 13-ல் ஜனாதிபதி தேர்தல்

Published On 2018-02-23 16:11 GMT   |   Update On 2018-02-23 16:11 GMT
நேபாள நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற மார்ச் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Nepal #Presidentelection

காத்மண்டு:

நேபாள நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற மார்ச் மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாக பிந்தியா தேவி பந்தாரி கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் இன்னும் முடிவடையாத நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற மார்ச் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற மார்ச் 7-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 13-ம் தேதி நடைபெறும் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அன்றே எண்ணப்பட்டு அன்று இரவே முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதி தேர்தல் தேதி, புதிய ஜனாதிபதி பதவிஏற்ற பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. #Nepal #Presidentelection #March13 #tamilnews
Tags:    

Similar News