செய்திகள்

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

Published On 2018-02-17 23:20 GMT   |   Update On 2018-02-17 23:20 GMT
மெக்சிகோ நாட்டில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மந்திரி சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது கீழே விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #Mexicohelicoptercrash #earthquake
மெக்சிகோ சிட்டி:

மெக்சிகோ நாட்டின் தலைநகரான மெக்சிகோ சிட்டி மற்றும் அருகாமையில் உள்ள சில மாவட்டங்களை நேற்று முன்தினம் மாலை கடுமையான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒக்சாக்கா மாநிலத்துக்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மீட்பு நடவடிக்கைகளை கண்காணிக்க அந்நாட்டின் உள்துறை மந்திரி நவரேட்டே, ஒக்சாக்கா மாநில கவர்னர் அலேஜான்ட்ரோ முரட் ஆகியோர் ஒரு ஹெலிகாப்டரில் சென்றனர்.

அந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்தது. உள்துறை மந்திரி, ஒக்சாக்கா கவர்னர் உள்ளிட்டோர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 16 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிழந்தவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. #Mexicohelicoptercrash #earthquake #tamilnews
Tags:    

Similar News