செய்திகள்

ஆஸி.யில் உள்ள சிவாவிஷ்ணு கோவிலுக்கு மாநில அரசு ஒன்றரை லட்சம் டாலர் நிதியுதவி

Published On 2018-02-16 09:48 GMT   |   Update On 2018-02-16 09:48 GMT
ஆஸ்திரேலியாவில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் புனரமைப்பு பணிகளுக்காக விக்டோரியா மாநில அரசு ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. #australia #victoria #shivavishnutemple
மெல்போர்ன்:

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் சிவாவிஷ்ணு கோவில் அமைந்துள்ளது. விக்டோரியா மாநிலத்தின் பல்கலாச்சார துறை மந்திரி ராபின் ஸ்காட் இன்று இந்த கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது அவர், சிவாவிஷ்ணு கோவிலின் புனரமைப்பு பணிகளுக்கு மாநில அரசு சார்பில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், புனிதத்தன்மை வாய்ந்த இந்த கோவிலின் புனரமைப்பு பணிகளுக்காக விக்டோரியா அரசு ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. நுழைவு வாயில்கள் மற்றும் வாகனங்கள் வந்து சேரும் பாதைகள் சீரமைக்கப்படும். மேலும், 300 கார்களை நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதிகள் செய்து தரப்படும் என்றார்.

மேலும், கோவிலை புனரமைப்பது இந்து சமுதாயத்தினர் தங்களது இரக்கம், தன்னலமற்ற தன்மை, ஒற்றுமை, சகிப்புத்தன்மை மற்றும் மரியாதை ஆகியவற்றின் மதிப்புகளை பகிர்ந்து கொள்ள உதவுகின்றது என்றும் ராபின் ஸ்காட் தெரிவித்துள்ளார். #australia #victoria #shivavishnutemple #tamilnews
Tags:    

Similar News