செய்திகள்

ஜப்பானில் இன்று நிலநடுக்கம் - ரிக்டரில் 6.4 அலகுகளாக பதிவு

Published On 2018-01-24 11:25 GMT   |   Update On 2018-01-24 11:25 GMT
ஜப்பான் நாட்டின் ஹான்சூ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ:

பசிபில் பெருங்கடல் ஓரத்தில் உள்ள ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான ஹான்சூ தீவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. 

ஹான்சூ தீவில் இருந்து வடகிழக்கு திசையில் சுமார் 103 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் சுமார் 64 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இன்றைய நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 6.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 10:51 மணியளவில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பான உடனடி தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. #Japan #HonshuIsland #Earthquake #tamilnews
Tags:    

Similar News