செய்திகள்

ஜெருசலேம் நகரில் அடுத்த ஆண்டுக்குள் புதிய தூதரகம்: அமெரிக்கா உறுதி

Published On 2018-01-22 14:21 GMT   |   Update On 2018-01-22 14:21 GMT
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அடுத்த ஆண்டுக்குள் ஜெருசலேம் நகரில் இயங்கத் தொடங்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் இன்று உறுதிபட தெரிவித்துள்ளார். #usembassy #jerusalem
டெல் அவிவ்:

இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேம் நகரை அறிவித்த முடிவை டிரம்ப் திரும்பப்பெற வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு சபையில் கடந்த மாதம் எகிப்து நாட்டின் சார்பில் தாக்கல் செய்த ஒருபக்கம் கொண்ட தீர்மானத்தை தனது ‘வீட்டோ’ அதிகாரத்தால் அமெரிக்கா தோற்கடித்தது.

இந்நிலையில், இஸ்ரேல் நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தற்போது டெல் அவிவ் நகரில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகம் அடுத்த (2019) ஆண்டு இறுதிக்குள் கிழக்கு ஜெருசலேம் நகரில் இயங்கத் தொடங்கும் என இன்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஜெருசலேம்தான் இஸ்ரேல் நாட்டின் தலைநகரம் என்பதால் டெல் அவிவ் நகரில் இயங்கிவரும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகருக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்ட மைக் பென்ஸ் புதிய தூதரகம் திறக்கப்படும் சரியான தேதி தொடர்பாக இன்று எதுவும் தெரிவிக்கவில்லை. #TamilNews #usembassy #jerusalem
Tags:    

Similar News