செய்திகள்

செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய புதிய அணுசக்தி கருவி - நாசா பரிசோதனை

Published On 2018-01-19 08:18 GMT   |   Update On 2018-01-19 08:18 GMT
செவ்வாய்க்கிரகத்தில் விஞ்ஞானிகள் அதிக நாட்கள் தங்கி சோதனை செய்ய தேவையான அணு மின் சக்தியை தரும் வகையில் புதிய கருவியை நாசா உருவாக்கியுள்ளது.
வாஷிங்டன்:

விண்வெளியில் குறிப்பாக செவ்வாய்க்கிரகத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அதிக நேரம் இருக்க புதிய அணுசக்தி அமைப்பை நாசா உருவாக்கியுள்ளது. அந்த கருவியின் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த கருவியின் மூலம் 10-க்கும் அதிகமான கிலோ வாட் மின்சாரத்தை உருவாக்க முடியும்.

இந்த சக்தியை விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்வதற்கு பயன்படுத்தலாம். மேலும் உபகரணங்களை பயன்படுத்த தேவைப்படும் ஆற்றலையும் இக்கருவி மூலம் பெறலாம்.

நாசாவின் கிலோபவர் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் செவ்வாய்க்கிரகத்தில் ஆராய்ச்சி செய்வதாகும். அதற்கு 40-50 கிலோ வாட் மின்சாரம் தேவை. யுரேனியம்-235 அணு உலையை பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கப்படுகிறது. இதன் முழு சோதனை மார்ச் மாதம் நடத்தப்படும் என நாசா தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News